தொழில்நுட்பம்

இன்ஸ்டாகிராமின் புது அப்டேட் வழங்கும் கூடுதல் வசதி

Published On 2018-11-16 07:15 GMT   |   Update On 2018-11-16 07:15 GMT
இன்ஸ்டாகிராமில் வழங்கப்பட்டுள்ள புது அப்டேட் மூலம் உங்களது பயன்பாட்டு விவரங்களை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும். #instagram



இன்ஸ்டாகிராம் செயலியின் புது அப்டேட் மூலம் யுவர் ஆக்டிவிட்டி (Your Activity) எனும் அம்சம் வழங்கப்படுகிறது. இந்த அம்சம் கொண்டு இன்ஸ்டாகிராம் செயலியை நீங்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றீர்கள் என்ற விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.

இதுமட்டுமின்றி தினமும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் நேரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அம்சங்களும் புது அப்டேட் மூலம் வழங்கப்படுகிறது. இவற்றுடன் புஷ் நோட்டிஃபிகேஷன்களை மியூட் செய்யும் அம்சம் வழங்கப்படுகிறது. எனினும் மியூட் செய்யும் வசதி சிறிது நேரத்திற்கு மட்டும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டா செயலியை பயனர்கள் அதிகளவு இயக்குவதற்கான வசதிகள் சேர்க்கப்படும் என இன்ஸ்டாகிராம் நிறுவனம் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தெரிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து புதிய வசதி செயலியில் சேர்க்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் நிறுவனம் போன்ற அறிவிப்பை ஃபேஸ்புக் நிறுவனமும் அறிவித்து இருந்தது, எனினும் இதற்கான அப்டேட் அந்நிறுவனம் தரப்பில் இருந்து இதுவரை வழங்கப்படவில்லை.



“ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவையை மக்கள் பயன்படுத்தும் போது, அவர்கள் தங்களது நேரத்தை மகிழ்ச்சியாக செலவழிக்கிறார்கள் என்ற உணர்வை ஏற்படுத்தச் செய்ய வேண்டும்,” என இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் வெல்-பீயிங் பிரிவு தலைவர் அமீத் ரனடைவ் தனது வலைதள பக்கத்தில் எழுதியிருந்தார்.

புது வசதிகளை இயக்க விரும்பும் பயனர்கள் தங்களது ப்ரோஃபைல் பக்கத்திற்கு செல்ல வேண்டும், இனி ஹேம்பர்கர் ஐகானை கிளிக் செய்தால் யுவர் ஆக்டிவிட்டி அம்சம் காணப்படும். இந்த ஆப்ஷனை கிளிக் செய்ததும் நீங்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட சாதனத்தில் நீங்கள் எவ்வளவு நேரம் செயலியை பயன்படுத்தி இருக்கின்றீர்கள் என்ற விவரங்களை பார்க்க முடியும்.

டேஷ்போர்டின் கீழ் தினசரி ரிமைன்டர் செட் செய்யும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தியதும், நீங்கள் செட் செய்த காலம் வரை இன்ஸ்டாகிராம் பயன்படுத்தலாம். பின் அந்த நாளுக்கான நேரம் நிறைவுற்றதும், இன்ஸ்டாகிராம் உங்களுக்கு நினைவூட்டும். எனினும், இந்த ஆப்ஷனை எந்நேரமும் நிராகரிக்கவோ அல்லது மாற்றியமைக்கவும் முடியும்.

இதேபோன்று நோட்டிஃபிகேஷன் செட்டிங்ஸ் சென்றால் மியூட் புஷ் நோட்டிஃபிகேஷன்ஸ் செட்டிங் காணப்படும். இதை செயல்படுத்தியதும், இன்ஸ்டாகிராம் நோட்டிஃபிகேஷன்கள் நீங்கள் விரும்பும் சிறிது நேரத்திற்கு கட்டுப்படுத்தப்படும்.
Tags:    

Similar News