தொழில்நுட்பம்

சாம்சங் 2019 ஃபிளிப் போன் அறிமுகம்

Published On 2018-11-11 09:21 GMT   |   Update On 2018-11-11 09:21 GMT
சாம்சங் நிறுவனத்தின் 2019 ஃபிளிப் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி டபுள்யூ2019 என அழைக்கப்படுகிறது. #samsung



சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு ஃபிளாக்ஷிப் சிறப்பம்சங்கள் நிறைந்த ஃபிளிப் போன்களை அறிமுகம் செய்தது. சீனாவில் மட்டும் விற்பனையாகி வரும் ஃபிளிப் போன்களின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஃபிளிப் போன் கேலக்ஸி டபுள்யூ2019 என அழைக்கப்படுகிறது. உயர் ரக ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களில் வழங்கப்படுவதை போன்ற சிறப்பம்சங்கள் கொண்ட ஃபிளிப் போன்களை வெளிப்புறம் திறக்காமல் அப்படியே பயன்படுத்த போனின் வெளிப்புறம் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி டபுள்யூ2019 ப்ளிப் போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. அல்லது 256 ஜி.பி. இன்டெர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இரண்டு டிஸ்ப்ளேக்களில் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேக்கள் 4.2 இன்ச் அளவில் வழங்கப்பட்டுள்ளது.



இந்த டிஸ்ப்ளேக்கள் 19:9 ரக ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. கேலக்ஸி டபுள்யூ2019 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. வேரியபிள் அப்ரேச்சர் கேமரா, வைடு-ஆங்கில் லென்ஸ், 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, முன்பக்கம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் 3070 எம்.ஏ.ஹெச். பேட்டரி, யு.எஸ்.பி. டைப்-சி வசதி, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் சாம்சங் யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கிறது. வழக்கமான சாம்சங் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படுவதை போன்றே புதிய ஃபிளிப் போனில் பிரத்யேக பிக்ஸ்பி பட்டன் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி டபுள்யூ2019 சிறப்பம்சங்கள்:

- 4.2 இன்ச், 1080x1920 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
- 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. / 256 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 12 எம்.பி. வேரியபிள் அப்ரேச்சர் கேமரா
- 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- 3070 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- யு.எஸ்.பி. டைப்-சி வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ

போனின் கைரேகை சென்சார் பக்கவாட்டில் வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் புதிய ஃபிளிப் போன் அனோடைஸ் செய்யப்பட்ட டைமன்ட் கட் அலுமினியம் மற்றும் கிளாஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News