தொழில்நுட்பம்
கோப்பு படம்

சாம்சங் கேலக்ஸி நோட் 9 லைவ் படங்கள் லீக் ஆனது

Published On 2018-07-22 06:31 GMT   |   Update On 2018-07-22 06:31 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், இதன் லைவ் படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Samsung #GalaxyNote9



சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் வெளியீட்டு அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், புதிய நோட் 9 சார்ந்த பல்வேறு தகவல்கள் மற்றும் அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி வருகிறது.

இதுவரை கான்செப்ட் படங்கள், சிறப்பம்சங்கள், போன்ற தகவல்கள் வெளியான நிலையில், கேலக்ஸி நோட் 9 நிஜ புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகிவிட்டது. இதில் ஸ்மார்ட்போனின் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் கேமரா சென்சாரின் கீழ் பொருத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

கேலக்ஸி நோட் 8 போன்றே நோட் 9 ஸ்மார்ட்போனும் செவ்வக வடிவில் பிளாக் டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் எக்சைனோஸ் 9810 அல்லது ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படலாம் என்றும் இதன் கேமரா சென்சார்கள் கேலக்ஸ் எஸ்9 பிளஸ் போன்றும் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



புதிய நோட் 9 சாதனத்தில் அதிகபட்சம் 512ஜிபி மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முந்தைய கேலக்ஸி எஸ்9 சீரிஸ் மாடலில் 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்துடன் நோட் 9 அறிமுக விழாவில் பிக்ஸ்பி 2.0 அறிமுகம் செயய்ப்படலாம் என கூறப்படுகிறது. புதிய நோட் 9 ஸ்மார்ட்போனுடன் மேம்படுத்தப்பட்ட எஸ் பென், மியூசிக் பிளேபேக் கன்ட்ரோல், செல்ஃபி டைமருக்கு நீண்ட நேரம் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

சாம்சங் தனது கேலக்ஸி நோட் 9 மாடலை ஆகஸ்டு 9-ம் தேதி வெளியிட இருக்கும் நிலையில், இதே நிகழ்வில் அந்நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் சாதனமும் அறிமுகமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் கியர் எஸ்4 சாதனம் தான் கேலக்ஸி வாட்ச் என்ற பெயரில் வெளியாகலாம் என கூறப்பட்டு இருந்தது. #Samsung #GalaxyNote9

புகைப்படம் நன்றி: /Leaks
Tags:    

Similar News