தொழில்நுட்பம்
கோப்பு படம்

140 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் சலுகை

Published On 2018-05-29 05:57 GMT   |   Update On 2018-05-29 05:57 GMT
ஏர்டெல் அறிவித்து இருக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா சுமார் 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
புதுடெல்லி:

ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.449 விலையில் கிடைக்கும் புதிய சலுகை ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வரும் ரூ.448 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. 

ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் ரூ.449 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா 70 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இத்துடன் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள், ரோமிங் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

ஜியோ வழங்கி வரும் ரூ.448 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா சுமார் 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஏர்டெல் வழங்கும் ரூ.448 சலுகையில் தினமும் 1.4 ஜிபி டேட்டா சுமார் 82 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதே சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.


கோப்பு படம்

முன்னதாக ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இரண்டு ஆட்-ஆன் இன்டர்நெட் சலுகைகள் அறிவிக்கப்பட்டது. ஒரு சலுகையின் விலை ரூ.193 என்றும் ரூ.49 என நி்ர்ணயம் செய்யப்பட்டது. இதில் ரூ.193 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி கூடுதல் டேட்டாவும், ரூ.49 சலுகையில் 1 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்பட்டது. 

இத்துடன் ஏர்டெல் வாடிக்கைாயளர்களுக்கு ரூ.49 விலையில் 3 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. இந்த சலுகையின் வேலிடிட்டி ஒரு நாள் ஆகும். இதேபோன்று ரூ.92 விலையில் வாடிக்கையாளர்களுக்கு 6 ஜிபி டேட்டா சுமார் ஏழு நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

ஐபிஎல் கிரிகெட் தொடரை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் சிறப்பு டேட்டா சலுகைகளை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News