தொழில்நுட்பம்

இணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி6 பிளே

Published On 2018-04-15 05:50 GMT   |   Update On 2018-04-15 05:50 GMT
மோட்டோரோலா விரைவில் வெளியிட இருக்கும் மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
புதுடெல்லி:

மோட்டோரோலாவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டோ ஜி6 சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் கசிந்து வருகின்றன. அந்த வகையில் மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

முன்னதாக ஆன்லைனில் பட்டியலிடப்பட்டிருந்த மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படங்கள் தற்சமயம் வெளியாகி இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்டி பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, ஆக்டாகோர் சிப்செட் 3 ஜிபி ரேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, இரண்டு கேமராக்களிலும் எல்இடி ஃபிளாஷ், டூயல் நானோ சிம் ஸ்லாட், கைரேகை சென்சார் மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.



மோட்டோ ஜி6 பிளே எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

- 5.7 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 IPS டிஸ்ப்ளே
- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் 64-பிட் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்
- அட்ரினோ 505 GPU
- 2 ஜிபி ரேம்
- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இஷ வைஃபை, ப்ளூடூத்
- 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

மோட்டோ ஜி6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதன் விலை 199.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.13,000) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக பிரேசில் நகரில் நடைபெற இருக்கிறது.
Tags:    

Similar News