என் மலர்

  நீங்கள் தேடியது "Motorola"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மோட்டோரோலா நிறுவனம் 2022 மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போனினை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • விரைவில் இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

  மோட்டோரோலா ரேசர் 2022 ஸ்மார்ட்போன் இதுவரை வெளியான கிளாம்ஷெல் போல்டபில் ஸ்மார்ட்போன்களை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட முதல் கிளாம்ஷெல் போல்டபில் போன் என்ற பெருமையை மோட்டோரோலா ரேசர் 2022 மாடல் பெற இருக்கிறது.

  சீன சந்தையில் மோட்டோரோலா ரேசர் 2022 மாடல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புது ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்காக சீன தளத்தில் பிரத்யேக வலைப்பக்கத்தை மோட்டோரோலா திறந்துள்ளது. அதில் புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது.


  இத்துடன் குவால்காம் நிறுவனத்தின் பிளாக்‌ஷிப் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 10 பிட் கலர் டிஸ்ப்ளே, HDR 20+, டிசி டிம்மிங் போன்ற வசதிகளை கொண்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே அம்சங்கள் மோட்டோரோலா எட்ஜ் 30 மாடலுக்கு நிகராக வழங்கப்பட்டு இருக்கிறது.

  மற்ற அம்சங்கள் அனைத்தும் தற்சமயம் விற்பனை செய்யப்படும், விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சவால் விடும் வகையில் வழங்கப்பட இருக்கிறது. மோட்டோ X30 ப்ரோ மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் தலைசிறந்த கேமரா சிஸ்டம் இந்த மாடலிலும் எதிர்பார்க்கலாம். மோட்டோரோலா ரேசர் 2022 பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மோட்டோ g82 5ஜி ஸ்மார்ட்போன் மீட்டியோரைட் கிரே மற்றும் ஒயிட் லில்லி ஆகிய இரு வண்ணங்களில் கிடைக்கிறது.
  • பிளிப்கார்ட் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் மூலமாக வருகிற ஜூன் 14-ந் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வர இருக்கிறது.

  மோட்டோ g82 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அந்த போன் ஜூன் 7-ந் தேதி இந்தியாவில் சில மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. குறைந்த விலையில் 50MP கேமரா வசதியுடன் அறிமுகமாகியுள்ள முதல் போன் இதுவாகும். உலகளவில் AMOLED டிஸ்பிளே உடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போன் இந்தியாவில் pOLED டிஸ்பிளே உடன் விற்பனைக்கு வர உள்ளது.

  இது 13 5ஜி பேண்ட் ஆதவுடன் இயங்கும் திறன் கொண்டதாகும். 6ஜிபி ரேம் கொண்ட ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 695 SoC, ஆண்ட்ராய்டு 12, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், OIS உடன் 50 மெகா பிக்சல் பின்பக்க கேமரா, 8 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் + டெப்த் கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை இந்த போனில் உள்ளன. மேலும் 30W டர்போ சார்ஜிங் வசதியுடன் 5000 mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.


  மோட்டோ g82 5ஜி ஸ்மார்ட்போன் மீட்டியோரைட் கிரே மற்றும் ஒயிட் லில்லி ஆகிய இரு வண்ணங்களில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் மூலமாக வருகிற ஜூன் 14-ந் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வர இருக்கிறது. இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இண்டர்னல் மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.21,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

  அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இண்டர்னல் மெமரியுடன் கூடிய மாடலின் விலை ரூ.22,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக ஆஃபராக SBI கிரெடிட் கார்டு மூலம் ரூ.1500 இன்ஸ்டண்ட் டிஸ்கவுண்ட் பெற முடியும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோட்டோரோலா நிறுவனத்தின் 2022 மோட்டோ ஜி பவர் ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.


  மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ ஜி பவர் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.5 இன்ச் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

  இத்துடன் புகைப்படங்களை எடுக்க 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

   மோட்டோ ஜி பவர் 2022

  புதிய மோட்டோ ஜி பவர் 2022 ஸ்மார்ட்போன் விலை 199.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 14,840 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது அமெரிக்காவில் அறிமுகமாகி இருக்கும் மோட்டோ ஜி பவர் 2022 மாடலின் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.


  மோட்டோ வாட்ச் 100 பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாகி இருக்கிறது. இதனை இ-பை-நௌ எனும் நிறுவனம் உற்பத்தி செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மோட்டோ வாட்ச் ஓ.எஸ். கொண்டிருக்கிறது. 

  அம்சங்களை பொருத்தவரை புதிய மோட்டோ வாட்ச் 100 மாடலில் 1.3 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன், 42 எம்.எம். அலுமினியம் கேசிங், இதய துடிப்பு மற்றும் எஸ்.பி.ஓ.2 மாணிட்டரிங், 26 ஸ்போர்ட் மோட்கள் வழங்கப்பட்டு உள்ளன. 

   மோட்டோ வாட்ச் 100

  இத்துடன் 5 ஏ.டி.எம். தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், ஜி.பி.எஸ்., பெய்டூ, ப்ளூடூத் 5 எல்.இ. போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மொத்த எடை 45.8 கிராம் ஆகும். முழுமையாக சார்ஜ் செய்தால் இந்த ஸ்மார்ட்வாட்ச் 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

  மோட்டோ வாட்ச் 100 மாடல் கிளேசியர் சில்வர் மற்றும் பேண்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 99.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 7,449 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் இந்த வாட்ச் மோட்டோவாட்ச் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோட்டோராலா நிறுவனம் இந்திய சந்தையில் மூன்று புதிய மொபைல் போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.


  மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் பீச்சர் போன் மாடல்களை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய பீச்சர் போன் மாடல்கள் மோட்டோ ஏ10, மோட்டோ ஏ50 மற்றும் மோட்டோ ஏ70 பெயர்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

  அம்சங்களை பொருத்தவரை மோட்டோ ஏ10 மற்றும் மோட்டோ ஏ50 மாடல்களில் 1.8 இன்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் எம்டி6261டி சிப்செட், ஆட்டோ கால் ரெக்கார்டிங், வயர்லெஸ் எப்.எம். ரேடியோ போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

   கோப்புப்படம்

  இத்துடன் புதிய மோட்டோ ஏ சீரிஸ் மாடல்களை ஐந்து இந்திய மொழிகளில் இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. மோட்டோ ஏ50 பேக் பேனலில் கேமரா மற்றும் டார்ச் வழங்கப்படுகிறது. இந்த அம்சங்கள் மோட்டோ ஏ10 மாடலில் வழங்கப்படவில்லை. இரு மாடல்களிலும் டூயல் சிம் வசதி மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் வழங்கப்படுகிறது.

  மோட்டோ ஏ70 மாடலில் 2.4 இன்ச் டிஸ்ப்ளே, யுனிசாக் சிப்செட், விஜிஏ கேமரா, எல்.இ.டி. டார்ச் வழங்கப்படுகிறது. இந்த மொபைலில் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அதிகபட்சம் 2 ஆயிரம் காண்டாக்ட்களை ஸ்டோர் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் போட்டோ மற்றும் காண்டாக்ட்களுக்கு ஐகான்களை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ இசட்4 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.  மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இசட்4 ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் OLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

  புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது குவாட்-பிக்சல் தொழில்நுட்பம் மூலம் 12 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை வழங்குகிறது. இத்துடன் OIS, செயற்கை நுண்ணறிவு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. முன்புறம் 25 எம்.பி. செல்ஃபி கேமரா, 1.8µm குவாட் பிக்சல் மோட் வழங்கப்பட்டுள்ளது. இது செல்ஃபிக்களை 6.25 எம்.பி. தரத்தில் வழங்கும்.

  இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பேக், 6000 சீரிஸ் பாலிஷ் செய்யப்பட்ட அனுமினியம் ஃபிரேம், P2i ஸ்பிளாஷ் ப்ரூஃப் நானோ கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது. 3600 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் மோட்டோ இசட்4 ஸ்மார்ட்போனில் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.  மோட்டோ இசட்4 சிறப்பம்சங்கள்:

  - 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 OLED டிஸ்ப்ளே
  - 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
  - அட்ரினோ 612 GPU
  - 4 ஜி.பி. ரேம்
  - 128 ஜி.பி. மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - ஆண்ட்ராய்டு 9.0 பை
  - 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7, PDAF,  OIS, லேசர் ஆட்டோபோகஸ்
  - 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 0.9um பிக்சல்
  - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
  - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
  - ஸ்பிளாஷ் ரெசிஸ்டண்ட்
  - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
  - யு.எஸ்.பி. டைப்-சி
  - 3600 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  - 15 வாட் டர்போ சார்ஜிங்

  மோட்டோ இசட்4 ஸ்மார்ட்போன் ஃபிளாஷ் கிரே மற்றும் ஃபிராஸ்ட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 499.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.34,900) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. மோட்டோரோலா ஒன் விஷன் என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 21:9 சினிமா விஷன் எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

  எக்சைனோஸ் 9609 பிராசஸர் கொண்டிருக்கும் புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் 25 எம்.பி. இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமரா வழங்கப்ட்டுள்ளது. இத்துடன் 1.8µm குவாட் பிக்சல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருப்பதால் குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பான செல்ஃபிக்களை எடுக்க முடியும்.  புகைப்படம் எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, நைட் விஷன் மோட், OIS மற்றும் குவாட் பிக்சல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து தெளிவான 12 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை வழங்குகிறது. இத்துடன் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

  ஸ்மார்ட்போனின் பின்புறம் 4D கார்னிங் கொரில்லா கிளாஸ் பேக் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கைரேகை சென்சார் பேக் பேனலில் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கும் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதனை வேகமாக சார்ஜ் செய்ய 15 வாட் டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.  மோட்டோரோலா ஒன் விஷன் சிறப்பம்சங்கள்:

  - 6.3 இன்ச் 1080x2520 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி.
  - 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் 9609 பிராசஸர்
  - 4 ஜி.பி. ரேம்
  - 128 ஜி.பி. மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - ஹைப்ரிட் டூல் சிம் ஸ்லாட்
  - ஆண்ட்ராய்டு 9.0 பை
  - 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7, OIS
  - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
  - 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
  - கைரேகை சென்சார்
  - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டூயல் மைக்ரோபோன்
  - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
  - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  - 15 வாட் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங்

  மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் சஃபையர் புளு, பிரவுன் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 299 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.23,520) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சவுதி அரேபியா மற்றும் தாய்லாந்தில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின் ஆசிய, மத்திய கிழக்கு மற்றும் ஆஸ்திரேலியா உள்ள நாடுகளில் விற்பனைக்கு வருகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் 48 எம்.பி. பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. #Motorola  மோட்டோரோலா நிறுவனம் கடந்த ஆண்டு மோட்டோ இசட்3 மற்றும் இசட்3 பிளே ஸ்மார்ட்போன்களை மோட்டோ மாட்ஸ் வசதியுடன் அறிமுகம் செய்தது. மோட்டோ இசட்3 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.

  அந்த வகையில் மோட்டோ இசட்4 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள் இணையத்தில் லீக் ஆக்யுள்ளது. அதன்படி மோட்டோ இசட்4 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 675 ஆக்டா-கோர் பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் இதில் மோட்டோ மாட்ஸ் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

  இத்துடன் மோட்டோ இசட்4 மாடலில் மோட்டோரோலாவின் 5ஜி மாட் மூலம் 5ஜி சேவையை பயன்படுத்தும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. தரத்திலான OLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  புகைப்படங்களை எடுக்க மோட்டோ இசட்4 ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. இது குவாட் பிக்சல் தொழில்நுட்பத்தில் நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து ஒற்றை பெரிய பிக்சலில் புகைப்படங்களை 12 எம்.பி. தரத்தில் வழங்கும் என கூறப்படுகிறது. முன்புறம் 25 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் குரூப் செல்ஃபி மோட் கொண்டிருக்கும் என தெரிகிறது.

  இவற்றுடன் புகைப்படங்களை அழகாக்க ஏ.ஐ. மோட், நைட் விஷன் மோட், 6எம்.பி. போட்டோஸ் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படலாம். இவற்றை சக்தியூட்ட 3600 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் டர்போ சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். புதிய ஸ்மார்ட்போனிலும் மோட்டோரோலா 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்பிளாஷ் ப்ரூஃப் கொண்ட நானோ கோட்டிங் உள்ளிட்டவற்றை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  மோட்டோ இசட்4 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் இத்துடன் கூகுளின் டிஜிட்டல் வெல்பீயிங் மற்றும் லென்ஸ் சேவைகள் வழங்கப்படும் என தெரிகிறது. இதுமட்டுமின்றி மோட்டோ டிஸ்ப்ளே, மோட்டோ ஆக்‌ஷன்ஸ், மோட்டோ எக்ஸ்பீரியன்சஸ் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

  புகைப்படம் நன்றி: 91mobiles
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் கூகுளின் ஏ.ஆர். கோர் வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. #MotorolaOneVision  மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் சார்ந்த விவரங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வந்தது. இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போன் உருவாவதை கூகுள் உறுதிப்படுத்தியிருக்கிறது. 

  மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் கூகுளின் ஏ.ஆர். கோர் வசதியை சப்போர்ட் செய்யும் சாதனங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9610 சிப்செட் மற்றும் 4 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

  மோட்டோரோலா ஒன் மற்றும் மோட்டோரோலா ஒன் பவர் போன்று புதிய ஒன் விஷன் ஸ்மார்ட்போனும் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தை சப்போர்ட் செய்யும் என கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் மோட்டோ ஸ்மார்ட்போனில் மென்பொருள் அப்டேட்கள் வேகமாக கிடைக்கும்.  மோட்டோரோலா ஒன் விஷன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

  - 21:9 ரக ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2520 பிக்சல் டிஸ்ப்ளே
  - எக்சைனோஸ் 9610 சிப்செட்
  - ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் (சீனாவில் மட்டும்)
  - 3 ஜி.பி. / 4 ஜி.பி. ரேம்
  - 32 ஜி.பி. / 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - 48 எம்.பி. பிரைமரி கேமரா 
  - ஹோல் பன்ச் டிஸ்ப்ளே 
  - டூயல் பிரைமரி கேமரா
  - ஆண்ட்ராய்டு 9.0 பை
  - டால்பி ஆடியோ

  புகைப்படம் நன்றி: TigerMobiles
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லெனோவோவின் மோடடோராலா நிறுவனம் புதிதாக ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. #Motorola  மோட்டோரோலா நிறுவனம் புதிதாக ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. 

  இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் மோட்டோரோலா பி30 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக மோட்டோரோலா பி40 என்ற பெயரில் அறிமுகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போன் வடிவமைப்பு பற்றிய விவரங்களும் வெளியாகியிருக்கின்றன. 

  அதன்படி மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனில் எட்ஜ்-டு-எட்ஜ் ஸ்கிரீன் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்புறம் டிஸ்ப்ளே நாட்ச் இடம்பெறாமல், பன்ச்-ஹோல் செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போனும் இதேபோன்ற வடிவமைப்பு கொண்டிருக்கிறது.  இத்துடன் ஸ்மார்ட்போனில் மெல்லிய பெசல்கள், ஸ்பீக்கர் கிரில் மற்றும் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதில் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் செங்குத்தாக பொருத்தப்பட்ட நிலையில் டூயல் கேமரா செட்டப் இடம்பெற்றிருக்கிறது.

  இதில் ஒன்று 48 எம்.பி. சென்சார் என கூறப்படுகிறது. கேமரா சென்சார்களின் கீழ் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. மோட்டோரோலா லோகோவும் ஸ்மார்ட்போனின் பின்புறம் காணப்படுகிறது. இதனுள் கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  சிறப்பம்சங்களை பொருத்தவரை மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனில் ஃபுல் ஹெச்.டி. ரெசல்யூஷனில் 1080x2560 பிக்சல் டிஸ்ப்ளே, சாம்சங் எக்சைனோஸ் 9610 சிப்செட், 3 ஜிபி. / 4 ஜி.பி. ரேம் மற்றும் 32 ஜி.பி. / 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோட்டோரோலா நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #Motorola  மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் FHD+ மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். சிப்செட், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கிறது.

  புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 3டி கிளாஸ் பேக் கொண்டிருக்கும் மோட்டோ ஜி7 மாடலின் பின்புறம் கைரேகை சென்சார், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 15 வாட் டர்போ சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

  புதிய மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனுடன் மோட்டோரோலா ஒன் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.  மோட்டோ ஜி7 சிறப்பம்சங்கள்:

  - 6.24 இன்ச் 2270x1080 பிக்சல் ஃபுல் ஹெசி.டி. பிளஸ் 19.5:9 ரக டிஸ்ப்ளே
  - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
  - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆகடா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
  - அட்ரினோ 506 GPU
  - 4 ஜி.பி. ரேம்
  - 64 ஜி.பி. மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - டூயல் சிம் ஸ்லாட்
  - ஆண்ட்ராய்டு 9.0 பை
  - வாட்டர் ரெசிஸ்டண்ட் P2i கோட்டிங்
  - 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, 1.25um பிக்சல்
  - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
  - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2 
  - கைரேகை சென்சார்
  - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி ஆடியோ
  - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளுடூத் 4.2
  - யு.எஸ்.பி. டைப்-சி
  - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  - 15 வாட் டர்போ சார்ஜிங்  மோட்டோரோலா ஒன் சிறப்பம்சங்கள்:

  - 5.9 இன்ச் 1520x720 பிக்சல் 18.5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
  - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர்
  - அட்ரினோ 506 GPU
  - 4 ஜி.பி. ரேம்
  - 64 ஜி.பி. மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - டூயல் சிம்
  - ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
  - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
  - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
  - 8 எம்.பி. செல்ஃபி கேமரா
  - வாட்டர் ரெசிஸ்டண்ட் P2i நானோ கோட்டிங்
  - கைரேகை சென்சார்
  - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
  - யு.எஸ்.பி. டைப்-சி
  - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  - 15 வாட் டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங்

  மோட்டோ ஜி7 மற்றும் மோட்டோரோலா ஒன் ஸ்மார்ட்போன்கள் க்ளியர் வைட் மற்றும் செராமிக் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை முறையே ரூ.16,999 மற்றும் ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print