தொழில்நுட்பம்
கோப்பு படம்: ஏர்டெல்

40ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் சலுகை

Published On 2018-03-20 05:40 GMT   |   Update On 2018-03-20 05:40 GMT
பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு 40 ஜிபி அளவு டேட்டா வழங்கும் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்திய டெலிகாம் சந்தையின் முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து கவர்ச்சிகர சலுகைகளை அறிவித்து வருகின்றன. ரிலையன்ஸ் ஜியோ அறிவித்திருக்கும் ரூ.498 சலுகைக்கு போட்டியாக பாரதி ஏர்டெல் புதிய சலுகையை அறிவித்துள்ளது. 

ஏர்டெல் அறிவித்திருக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 40 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய சலுகையின் விலை ரூ.499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

இந்த சலுகையில் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள், ரோமிங்கின் போது இலவச இன்கமிங் மற்றும் அவுட்-கோயிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதுதவிர அமேசான் பிரைம், வின்க் மியூசிக், லைவ் டிவி மற்றும் ஸ்மார்ட்போன் டேமேஜ் ப்ரோடெக்ஷன் உள்ளிட்டவை ஒரு ஆண்டு சந்தாவும் வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.498 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 182 ஜிபி அதிவேக 4ஜி டேட்டா, தினமும் 2 ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும். அதிவேக டேட்டா பயன்படுத்தியதும், டேட்டா வேகம் நொடிக்கு 64 கே.பி. (64 Kbps) ஆக குறைக்கப்படுகிறது.

டேட்டாவுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., இலவச ரோமிங் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. முன்னதாக ஒரு நாள் வேலிடிட்டியுடன் அதிரடி சலுகையை வழங்கும் புதிய சலுகையை வோடபோன் அறிவித்தது.
Tags:    

Similar News