தொழில்நுட்பம்

இந்தியாவில் நோக்கியா 6 விலை திடீர் குறைப்பு

Published On 2018-03-07 11:01 GMT   |   Update On 2018-03-07 11:01 GMT
இந்தியாவில் ஹெச்.எம்.டி. குளோபல் அறிமுகம் செய்து விற்பனையாகி வரும் 3ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் விலை ரூ.1500 வரை குறைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 5 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இதன் 4 ஜிபி ரேம் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. அமேசான் வலைத்தளத்தில் 3 ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 6 ஸ்மார்ட்போன் ரூ.1,500 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.13,499க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

குறுகிய கால சலுகையாக நோக்கியா 6 விலை குறைக்கப்பட்டு இருப்பதாக அமேசான் தெரிவித்துள்ளது. நோக்கியா 6 புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை தொடர்ந்து 3 ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 6 விலை திடீரென குறைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் புதிய நோக்கியா 6 ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



நோக்கியா 6 சிறப்பம்சங்கள்:

- 5.5-இன்ச் 1920x1080 பிக்சல் 2.5D திரை
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்
- அட்ரினோ 505 GPU
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 16 எம்பி பிரைமரி கேரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ்
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார் 
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் 
- 3000 எம்ஏஎச் பேட்டரி
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

சில்வர் மற்றும் மேட் பிளாக் நிறங்களில் கிடைக்கும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.13,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News