மொபைல்ஸ்

8 ஜிபி ரேம், 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2023-06-22 10:02 GMT   |   Update On 2023-06-22 10:02 GMT
  • விவோ நிறுவனத்தின் புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒஎஸ் கொண்டுள்ளது.
  • விவோ Y36 மாடலில் 50MP பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய விவோ Y36 ஸ்மார்ட்போனில் 6.64 இன்ச் FHD+ 90Hz டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்கிராட்ச் ரெசிஸ்டன்ட் பேக் டிசைன், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

விவோ Y36 அம்சங்கள்:

6.64 இன்ச் 2388x1080 பிக்சல் Full HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்

அட்ரினோ 610 GPU

8 ஜிபி ரேம்

128 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் 13

டூயல் சிம் ஸ்லாட்

50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிலாஷ்

2MP டெப்த் கேமரா

16MP செல்ஃபி கேமரா

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

யுஎஸ்பி டைப் சி ஆடியோ

IP54 தர வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

யுஎஸ்பி டைப் சி

5000 எம்ஏஹெச் பேட்டரி

44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

விலை மற்றும் விவரங்கள்:

விவோ Y36 ஸ்மார்ட்போன் வைப்ரன்ட் கோல்டு மற்றும் மீடியோர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை விவோ இந்தியா இ ஸ்டோர், ப்ளிப்கார்ட் மற்றும் ரிடெயில் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.

Tags:    

Similar News