மொபைல்ஸ்

4ஜி கனெக்டிவிட்டியுடன் அறிமுகம் செய்யப்பட்ட முற்றிலும் புதிய நோக்கியா 3210

Published On 2024-05-09 12:40 GMT   |   Update On 2024-05-09 12:40 GMT
  • இந்த மொபைல் எஸ்30 பிளஸ் ஒ.எஸ். கொண்டிருக்கிறது.
  • இந்த மொபைல் மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் முற்றிலும் புதிய நோக்கியா 3210 மொபைல் போன் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் அந்நிறுவனம் 25 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்த மொபைலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 2.4 இன்ச் TFT LCD ஸ்கிரீன், QVGA ரெசல்யூஷன், 2MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மொபைல் எஸ்30 பிளஸ் ஒ.எஸ். கொண்டிருக்கிறது. இது கிளவுட் சார்ந்த செயலிகளை இயக்கும் வசதி கொண்டிருக்கிறது. இதன் மூலம் செய்திகள், வானிலை அப்டேட்கள் மற்றும் யூடியூப் ஷாட்ஸ் உள்ளிட்டவைகளை இயக்க முடியும். 2024 நோக்கியா 3210 மாடல் யுனிசாக் டி107 பிராசஸர், 64எம்.பி. ரேம், 128 எம்.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டிருக்கிறது.

கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 5, 3.5mm ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ, MP3 பிளேயர் மற்றும் நோக்கியா போன்களில் பிரபலமான ஸ்னேக் கேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் போன் 1450 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் யு.எஸ்.பி. டைப் சி வழங்கப்பட்டுள்ளது.

புதிய நோக்கியா 3210 (2024) மாடலின் விலை 89 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 7 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மொபைல் போன் க்ரஞ்ச் பிளாக், Y2K கோல்டு மற்றும் சப்பா புளூ நிறங்களில் கிடைக்கிறது. 

Tags:    

Similar News