மொபைல்ஸ்

7,000mAh பேட்டரியுடன் புது மோட்டோ ஸ்மார்ட்போன் டீசர் வெளியீடு

Published On 2026-02-23 18:11 IST   |   Update On 2026-02-23 18:11:00 IST
  • மோட்டோரோலா சிக்னேச்சர் மாடலை போன்ற டிசைன் கொண்டிருக்கும்.
  • இந்த ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

மோட்டோரோலா நிறுவனத்தின் முற்றிலும் புதிய எட்ஜ் சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்ைதயில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் மோட்டோரோலா எட்ஜ் 70 பியூஷன் என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும் என்று மோட்டோரோலா நிறுவனம் டீசர் வெளியிட்டு அறிவித்து இருக்கிறது.

இந்திய சந்தையில் மோட்டோரோலா நிறுவனம் தனது பெரும்பாலான ஸ்மார்ட்போன் மாடல்களை ப்ளிப்கார்ட் தளத்திலேயே விற்பனை செய்து வருகிறது. இந்த வரிைசயில் புதிய மோட்டோ எட்ஜ் 70 பியூஷன் மாடலும் இணைகிறது. தற்போதைய டீசர்களின் படி இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா சிக்னேச்சர் மாடலை போன்ற டிசைன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

இத்துடன் சதுரங்க வடிவ கேமரா மாட்யூல், எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுகிறது. டீசர்களில் இந்த ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என்றும் இதில் குவாட் பிக்சல் சென்சார் இடம்பெறும் என்றும் தெரியவந்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் பேன்டோன் சான்றுபெற்ற புளூ சர்ஃப், கவுண்ட்டி ஏர் மற்றும் சில்ஹௌட் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் லெதர் ஃபினிஷ் செய்யப்பட்ட பேக் பேனல் கொண்டிருக்கும்.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 4 சிப்செட், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 7000mAh பேட்டரி வழங்கப்படலாம். அந்த வகையில், இது மோட்டோரோலா நிறுவனத்தின் அதிக சக்திவாய்ந்த பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கலாம். 

Tags:    

Similar News