6500mAh பேட்டரியுடன் பட்ஜெட் பிரிவில் புது ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்!
- இந்த ஸ்மார்ட்போன் டிமென்சிட்டி 6300 சிப்செட் கொண்டிருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் இருவித நிறங்களில் கிடைக்கிறது.
ஒப்போ நிறுவனத்தின் முற்றிலும் புதிய K சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. K14x 5ஜி என அழைக்கப்படும் புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் 6.75 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. மீடியாடெக் நிறுவனத்தின் டிமென்சிட்டி 6300 சிப்செட் கொண்டிருக்கும் புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரியுடன் வருகிறது.
புகைப்படங்களை எடுக்க ஒப்போ K14x 5ஜி ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, 2MP போர்டிரெயிட் சென்சார், 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP64) வசதி உள்ளது.
கனெக்டிவிட்டியை பொருத்தவரை 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6500mAh பேட்டரி, 45 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஒப்போ K14x 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த கலர் ஓஎஸ் 16 வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய ஒப்போ K14x 5ஜி ஸ்மார்ட்போன் ப்ரிசம் வயலெட் மற்றும் ஐசி புளூ என இரு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,999 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன் விற்பனை ஒப்போ இந்தியா ஆன்லைன் ஸ்டோர், ப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் பிப்ரவரி 16ஆம் தேதி தொடங்குகிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ. 1500 வங்கி சலுகையும், மூன்று மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை சலுகையும் வழங்கப்படுகிறது.