6,000mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்... பட்ஜெட் விலையில் புது சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்
- இந்த ஸ்மார்ட்போன் 199 கிராம் எடையும் 8.2 மில்லிமீட்டர் தடிமன் கொண்டது.
- இத்துடன் மைக்ரோ-எஸ்டி ஸ்லாட் மூலம் மெமரியை 1TB வரை நீட்டிக்கும் வசதி கொண்டுள்ளது.
சாம்சங் நிறுவனம், இந்தியாவில் A சீரிசில் நிறுவனத்தின் சமீபத்திய 5ஜி ஸ்மார்ட்போனான கேலக்ஸி A07 5ஜியை அறிமுகப்படுத்தியது. புதிய கேலக்ஸி A07 5ஜி ஸ்மார்ட்போன் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.7-இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
கட்டமைப்பைப் பொறுத்தவரை, இந்த சாதனம் பேக் பேனலுக்கு புதிய கிளாஸ் ஃபைபர் ரீஇன்ஃபோர்ஸ்டு பாலிமர் (GFRP) பயன்படுத்துகிறது. இது மெல்லிய கட்டமைப்புடன் முந்தைய பொருட்களை விட அதிக வலிமையை வழங்குகிறது என்று சாம்சங் கூறுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 199 கிராம் எடையும் 8.2 மில்லிமீட்டர் தடிமன் கொண்டது. இத்துடன் IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்- லைட் வயலட், லைட் க்ரீன் மற்றும் பிளாக் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.
புதிய கேலக்ஸி A07ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 50MP பிரைமரி கேமரா, 2MP செனசார் என இரட்டை கேமரா யூனிட்களையும், முன்புறத்தில் 8MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
கனெக்டிவிட்டியை பொருத்தவரை 12 அலைவரிசைகளில் 5ஜி வழங்கப்படுகிறது. இது இந்தியா முழுவதும் பல்வேறு நெட்வொர்க்குகளுடன் இணக்கத்தன்மையை உறுதி செய்கிறது. இந்த சாதனம் சமீபத்திய ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஒன் யுஐ 8.0 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆறு ஆண்டுகள் ஓஎஸ் அப்டேட், மூன்று ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக சாம்சங் உறுதியளிக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 6nm பிராசஸர் மற்றும் ARM மாலி-G57 MC2 GPU கிராஃபிக்ஸ் உடன் வருகிறது. மெமரியை பொருத்தவரை 4GB / 6GB LPDDR4X ரேம், 128GB மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் மைக்ரோ-எஸ்டி ஸ்லாட் மூலம் மெமரியை 1TB வரை நீட்டிக்கும் வசதி கொண்டுள்ளது.
இந்திய சந்தையில் புதிய சாம்சங் கேலக்ஸி A7 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15,999 என்றும் 6 ஜிபி, 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.17,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.