மொபைல்ஸ்

10,001mAh பேட்டரியுடன் அறிமுகமான ரியல்மி ஸ்மார்ட்போன்..!

Published On 2026-01-30 11:30 IST   |   Update On 2026-01-30 11:30:00 IST
  • இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ரியல்மி யுஐ 7.0 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது.
  • ரியல்மி P4 பவர் ஸ்மார்ட்போன் டிரான்ஸ் சில்வர், டிரான்ஸ் ஆரஞ்சு மற்றும் டிரான்ஸ் புளூ ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

இந்திய சந்தையில் அதிக பேட்டரி திறனுடன் வெளியான ஒட்டுமொத்த மாடல்களையும், பின்னுக்கு தள்ளும்படி 10,001mAh பேட்டரியுடன் ரியல்மி P4 பவர் ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. இதில் 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய ரியல்மி P4 பவர் ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச், 1280x2800 பிக்சல் 1.5K AMOLED டிஸ்பிளே, 144 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், அதிகபட்சமாக 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 7400 அல்ட்ரா சிப்செட், IP68 மற்றும் IP69 ரேட்டிங் கொண்டிருப்பதால் தண்ணீரில் செயல் இழக்காத அம்சமும் இதிலுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய பலம், அதன் பேட்டரிதான். 10,001mAh பேட்டரி, 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. புகைப்படங்களை எடுக்க ரியல்மி P4 பவர் ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, 8MPஅல்ட்ரா வைடு லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ரியல்மி யுஐ 7.0 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது.

ரியல்மி P4 பவர் ஸ்மார்ட்போன் டிரான்ஸ் சில்வர், டிரான்ஸ் ஆரஞ்சு மற்றும் டிரான்ஸ் புளூ ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 23,999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 25,999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 28,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News