மொபைல்ஸ்

10,001mAh பேட்டரி திறன்கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் Realme - விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2026-01-21 17:51 IST   |   Update On 2026-01-21 17:51:00 IST
  • இந்த மொபைல்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒரு வாரம் வரை பேட்டரி நீடிக்கும்.
  • குறிப்பாக 32 மணிநேரம் வரை தொடர்ந்து வீடியோ பார்க்கலாம்.

ரியல்மி நிறுவனம் வருகிற 29ஆம் தேதி இந்திய சந்தையில் ரியல்மி P4 பவர் மொபைல் போனை வெளியிட உள்ளது. இந்த மொபைல்போன் 10,001mAh என்ற மெகா பேட்டரி திறன்கொண்டது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட மொபைல் போன்களில் இது தான் அதிக பேட்டரி திறன்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மொபைல்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒரு வாரம் வரை பேட்டரி நீடிக்கும். குறிப்பாக 32 மணிநேரம் வரை தொடர்ந்து வீடியோ பார்க்கலாம் என்று Realme கூறியுள்ளது.

-30°C முதல் 56°C வரையிலான வெப்பநிலையில் கூட இந்த மொபைல்போன் செயல்படும். இந்த மொபைல்போன் 27W ரிவர்ஸ் சார்ஜிங்கையும் கொண்டுள்ளது. இது தேவைப்படும்போது மற்ற ஸ்மார்ட்போன்கள் மற்றும் கருவிகளுக்கு சார்ஜ் அளிக்க உதவும் .இதன் மொபைல்போனின் விலை ரூ.25,000 - ரூ.30,000க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News