null
#Smartphone | 7000mAh பேட்டரி, 144Hz டிஸ்ப்ளே... பட்ஜெட் விலையில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்!
ரியல்மி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. பட்ஜெட் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன் ரியல்மி C83 5ஜி என அழைக்கப்படுகிறது. அம்சங்களை பொருத்தவரை புதிய ரியல்மி C83 5ஜி ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் 144Hz LCD ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
மெமரியை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 12 ஜி.பி. வரை டைனமிக் ரேம் மற்றும் ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்டோரேஜை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 64 ஜி.பி. மற்றும் 128 ஜி.பி. என இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் மெமரியை 2 டி.பி. வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.
ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் ரியல்மி C83 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 17 சார்ந்த ரியல்மி யு.ஐ. 7 ஓ.எஸ். கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 13MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் மற்றும் 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. மேலும் 3.5mm ஆடியோ ஜாக் வழங்கப்பட்டுள்ளது.
புதிய C83 5ஜி ஸ்மார்ட்போன் டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP64) மற்றும் மிலிட்டரி தரச் சான்று பெற்றிருக்கிறது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3, யு.எஸ்.பி. டைப் சி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
விலையை பொருத்தவரை ரியல்மி C83 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 13,499 என்றும் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14,499 என்றும் டாப் எண்ட் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 17,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை மார்ச் 27-ஆம் தேதி ப்ளிப்கார்ட், ரியல்மி ஆன்லைன் தளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் தொடங்குகிறது.