120Hz டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி... ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்!
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் பிரிவில் அதிக கவனம் செலுத்தும் நிறுவனங்களில் ஒன்று டெக்னோ. அசத்தல் டிசைன், பயனர்கள் அதிகம் எதிர்பார்க்கும் அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
பாப் சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் டெக்னோ பாப் X என அழைக்கப்படுகிறது. 4ஜி ஸ்மார்ட்போன் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன் விலை உயர்ந்த மாடல்களில் மட்டும் காணப்படும் பல்வேறு அம்சங்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் அதிக உறுதித்தன்மை மற்றும் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை டெக்னோ பாப் X மாடலில் 6.75 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஆக்டா-கோர் யுனிசாக் T7250 பிராசஸர், மாலி-G57 MP1 GPU வழங்கப்பட்டு இருக்கிறது. மெமரியை பொருத்தவரை 4 ஜி.பி. LPDDR4X ரேம், 64 ஜி.பி. eMMC 5.1 மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மைக்ரோ எஸ்.டி. மூலம் மெமரியை நீட்டித்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.
டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் புதிய பாப் X ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஹைஓ.எஸ். 15 கொண்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இன்ஃப்ராரெட் சென்சார், 3.5mm ஆடியோ ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது.
டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்காக இந்த ஸ்மார்ட்போன் IP64 தரச் சான்று பெற்றிருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு டூயல் 4ஜி VoLTE, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 15 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.
விலை மற்றும் சலுகை விவரங்கள்:
இந்திய சந்தையில் புதிய டெக்னோ பாப் X ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 8,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் இந்தியா வலைத்தளம் மற்றும் முன்னணி சில்லறை விற்பனை மையங்களில் மார்ச் 6-ஆம் தேதி மதியம் 12 மணி முதல் தொடங்குகிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 7,749 விலைக்கு பெற முடியும்.