7600mAh பேட்டரியுடன் புது ஐகூ 15R இந்தியாவில் அறிமுகம்!
- இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஒரிஜின் ஓஎஸ் 6 கொண்டிருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் மூன்றுவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ஐகூ நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் ஐகூ 15R இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 6.59 இன்ச் 2750x1260 பிக்சல் OLED ஸ்கிரீன், 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் உள்ளது. இத்துடன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஒரிஜின் ஓஎஸ் 6 கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி வரை மெமரியுடன் வருகிறது. மேலும், இதில் ஐஸ்கோர் வி.சி. கூலிங் வசதி உள்ளது. இத்துடன் டூயல்-லேயர் கிராஃபைட் ஷீட் மூலம் ஸ்மார்ட்போனின் வெப்பம் அதிகரித்தலை கட்டுப்படுத்துகிறது.
புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ராவைடு லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாக 7600mAh பேட்டரி இருக்கிறது. இத்துடன் 100 வாட் ஃபிளாஷ் சார்ஜ் வசதி மற்றும் பிடி சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் புதிய ஐகூ 15R ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 44,999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 47,999 என்றும் டாப் எண்ட் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 52,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போநின் விற்பனை அமேசான், ஐகூ வலைத்தளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் மார்ச் 3ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகள் (ஹெச்.டி.எஃப்.சி. மற்றும் ஆக்சிஸ் வங்கி) பயன்படுத்தும் போது ரூ. 4000 உடனடி தள்ளுபடி பெற முடியும். இத்துடன் 6 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.