மொபைல்ஸ்

7000mAh பேட்டரி, 50MP கேமரா... பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன் இறக்கிய ஒப்போ..!

Published On 2026-01-24 10:35 IST   |   Update On 2026-01-24 10:35:00 IST
  • ஒப்போ A6 5ஜி ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, 2MP மோனோக்ரோம் கேமரா மற்றும் 8MP செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது.
  • இந்த பேட்டரி 5 ஆண்டுகள் நீடித்து உழைக்கும் தன்மையை உறுதி செய்கிறது.

கடந்த ஆண்டு வெளியான A5 5ஜி-யின் அடுத்த மாடலாக, ஒப்போ A6 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. இதில் 6.75-இன்ச் HD+ 120Hz LCD ஸ்கிரீன், IP66, IP68 மற்றும் IP69 மதிப்பீடுகளை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம், 3900 மிமீ² லிக்விட் சேம்பர் உடன் வருகிறது. இது கேமிங்கின் போதும் ஸ்மார்ட்போன் அதிக சூடாவதை ஓரளவுக்கு குறைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.

ஒப்போ A6 5ஜி ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, 2MP மோனோக்ரோம் கேமரா மற்றும் 8MP செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 45W SUPERVOOC ஃபிளாஷ் சார்ஜுடன் 7000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரி 5 ஆண்டுகள் நீடித்து உழைக்கும் தன்மையை உறுதி செய்கிறது.

ஒப்போ A6 5ஜி அம்சங்கள்

6.75-இன்ச் 1570×720 பிக்சல் HD+ ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 6nm பிராசஸர்

மாலி-G57 MC2 GPU

4GB / 6GB GB LPDDR4x ரேம், 128GB / 256GB (UFS 2.2) மெமரி

டூயல் சிம்

ஆண்ட்ராய்டு 15 சார்ந்த கலர்ஓஎஸ் 15

50MP பிரைமரி கேமரா

2MP மோனோக்ரோம் கேமரா, LED ஃபிளாஷ்

8MP செல்ஃபி கேமரா

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்

டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP66+IP68+IP69)

5G SA / NSA (n1/n3/n5/n8/n28B/n38/n40/n41/n48/n77/n78 பேண்ட்கள்), டூயல் 4G VoLTE

வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.4, GPS, GLONASS, கலிலியோ, QZSS, யுஎஸ்பி டைப்-சி

7000mAh பேட்டரி

45W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்

விலை விவரங்கள்

ஒப்போ A6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் சகுரா பிங்க், ஐஸ் வைட் மற்றும் சஃபையர் புளூ வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் 4GB + 128GB மாடலின் விலை ரூ.17,999, 6GB + 128GB மாடலின் விலை ரூ. 19,999, மற்றும் 6GB + 256GB மாடலின் விலை ரூ.21,999. இந்த போன் ஒப்போ ஆன்லைன் ஸ்டோர் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது.

Tags:    

Similar News