ஹைப்ரிட் ANC, 10-நிமிட சார்ஜில் 3 மணி நேர பிளேபேக்... அசத்தும் boAt இயர்பட்ஸ் அறிமுகம்..!
- ANC இல்லாமல் பேட்டரி ஆயுள் 40 மணிநேரம் வரையிலும், ANC உடன் 25 மணிநேரம் வரையிலும் நீடிக்கும்.
- ASAP சார்ஜ் மூலம் பத்து நிமிட சார்ஜிங் செய்து மூன்று மணிநேரம் வரை பிளேபேக்கை பெற முடியும்.
போட் (boAt) நிறுவனம் நிர்வாணா கிரவுன் என்ற ட்ரூ வயர்லெஸ் (TWS) இயர்பட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சோனிக் ARC தொழில்நுட்பத்தைக் கொண்ட சார்ஜிங் கேஸுடன் வருகிறது . இந்த கேஸ் ஹாப்டிக் ஃபீட்பேக் உடன் சுழற்றக்கூடிய கண்ட்ரோல் டயல், ஒரு மல்டி-ஃபங்ஷனல் பட்டன் மற்றும் கஸ்டம் RGB LED-க்களை ஒருங்கிணைக்கிறது. அழைப்புகளுக்கு பதிலளிக்கவும், மியூசிக் பிளேபேக் கண்ட்ரோல் மல்டி-ஃபங்ஷனல் பட்டன் பயன்படுத்தலாம். அதே நேரத்தில் டயல் ஒலியளவை சரிசெய்ய அனுமதிக்கிறது. மேலும் உள்ளமைக்கக்கூடிய ஹாப்டிக் இன்டென்சிட்டி (குறைந்த, நடுத்தர, உயர்) ஆதரிக்கிறது.
சார்ஜிங் கேஸ் ஆதரிக்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ரிமோட் கேமரா ஷட்டராகவும் செயல்படுகிறது. தற்செயலான அழுத்தங்களைத் தடுக்க ஒரு லாக் செயல்பாட்டை உள்ளடக்கியது. இயர்பட்கள் 50dB வரை ஹைப்ரிட் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) மற்றும் ரியல்-டைம் ஸ்பேஷியல் ஆடியோவை வழங்குகின்றன. AI- அடிப்படையிலான ENx தொழில்நுட்பத்துடன் கூடிய ஆறு மைக்ரோஃபோன்கள் பயனரின் குரலைத் தனிமைப்படுத்தி, அழைப்புகளின் போது குரல் தெளிவாக கேட்பதை உறுதிப்படுத்த பின்னணி இரைச்சலை குறைக்கின்றன.
இரண்டு சாதனங்களுக்கு இடையில் மாறுவதற்கு இயர்பட்கள் மல்டிபாயிண்ட் இணைப்பை ஆதரிக்கின்றன மற்றும் பிளேபேக்கை தானாக இடைநிறுத்த அல்லது மீண்டும் தொடங்க இன்-இயர் டிடெக்ஷனை கொண்டுள்ளன. போட் ஹியரபில்ஸ் (boAt Hearables) ஆப் v2.0-ஐ பயன்படுத்தி, பயனர்கள் முன்னமைக்கப்பட்ட மற்றும் கஸ்டம் EQ-க்களை அமைக்கலாம். LED வண்ணங்கள் மற்றும் வடிவங்களைத் கஸ்டமைஸ் செய்யலாம், இயர்பட்கள் மற்றும் ரொடேஷனல் கிரவுன் கண்ட்ரோல்களை மாற்றியமைக்கலாம்., ANC மோட்களை நிர்வகிக்கலாம், பேட்டரி அளவைக் கண்காணிக்கலாம் மற்றும் ஓவர்-தி-ஏர் அப்டேட்களை பெறலாம்.
ANC இல்லாமல் பேட்டரி ஆயுள் 40 மணிநேரம் வரையிலும், ANC உடன் 25 மணிநேரம் வரையிலும் நீடிக்கும். ASAP சார்ஜ் மூலம் பத்து நிமிட சார்ஜிங் செய்து மூன்று மணிநேரம் வரை பிளேபேக்கை பெற முடியும். இதில் உள்ள BEAST™ மோட் கேமிங்கிற்கு லோ-லேடன்சி ஆடியோவை செயல்படுத்துகிறது. இயர்பட்கள் சாரல் மற்றும் வியர்வை ஆகியவற்றை தாங்கும் வகையில் IPX4 தரச்சான்று பெற்றுள்ளன. கூகுள் ஃபாஸ்ட் பேர் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஸ்விஃப்ட் பேர் இரண்டையும் ஆதரிக்கின்றன. மேலும் கூகுள் மற்றும் ஆப்பிள் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசசதியும் உள்ளன.
புதிய போட் நிர்வானா கிரவுன் (BoAt Nirvana Crown) மாடல் பிளேசிங் ரெட், கன்மெட்டல் கிரே மற்றும் சஃபையர் புளூ ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இதன் அறிமுக விலை (முதல் ஏழு நாட்களுக்கு மட்டும்) ரூ. 2,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு இதன் விலை ரூ. 2,799 என மாறிவிடும்.
இந்த இயர்பட் அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் போட் அதகாரப்பூர்வ வலைதளங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை கடைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.