மொபைல்ஸ்

5000mAh பேட்டரி, 68W சார்ஜிங்... மிரட்டும் மோட்டோ ஸ்மார்ட்போன்... விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2025-12-17 14:51 IST   |   Update On 2025-12-17 14:51:00 IST
  • விற்பனை வருகிற டிசம்பர் 23ஆம் தேதி, பகல் 12 மணிக்கு தொடங்குகிறது.
  • இத்துடன் டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் மோட்டோரோலா நிறுவனத்தின் அல்ட்ரா ஸ்லிம் மாடலாக மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. 5.99 மில்லிமீட்டர் அளவில் மிக மெல்லியதாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் புதிய மோட்டோ ஸ்மார்ட்போனி 5000mAh பேட்டரியுடன், 68W டர்போ-பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

ஸ்மார்ட்போன் பிரியர்கள் விரும்பும்படியான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்டி மூலம் மோட்டோரோலா எட்ஜ் 70 மாடல் இயங்குகிறது. இத்துடன் அட்ரினோ 722 ஜிபியு கிராஃபிக்ஸ் கார்டு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு அப்டேட், 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக மோட்டோரோலா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

புதிய எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்புடன் 6.7 இன்ச் 2712x1220 பிக்சல் pOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, முன்புறம் 50MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் மோட்டோ ஏஐ 2.0 மூலம் ஏ.ஐ. இமேஜ் ஸ்டூடியோ (AI Image Studio), ஸ்கெட்ச் டூ இமேஜ் (Sketch to Image), ஸ்டைல் சின்க் (Style Sync) போன்று கேமரா சர்ந்த அம்சங்கள் இந்த மாடலில் நிறைந்துள்ளன.

இந்த ஸ்மார்ட்போன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி பாதுகாப்பு, IP68 மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இத்துடன் டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.29,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது தள்ளுபடி சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்போனினை ரூ.28,999 முதல் வாங்கலாம். விற்பனை வருகிற டிசம்பர் 23ஆம் தேதி, பகல் 12 மணிக்கு தொடங்குகிறது.

புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் பேண்டோன் லில்லி பேட், பேண்டோன் கேஜெட் கிரே மற்றும் பேண்டோன் ப்ரோன்ஸ் கிரீன் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

Tags:    

Similar News