மொபைல்ஸ்

ரெனோ 10 இந்திய விலை அறிவிப்பு.. சொன்னதை செய்த ஒப்போ!

Published On 2023-07-20 08:27 GMT   |   Update On 2023-07-20 08:27 GMT
  • ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 10 சீரிசில் மொத்தம் மூன்று மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
  • ரெனோ 10 ஸ்மார்ட்போனில் மீடிாடெக் டிமென்சிட்டி 7050 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ரெனோ 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அப்போது ரெனோ 10 ப்ரோ மற்றும் ரெனோ 10 ப்ரோ பிளஸ் மாடல்களின் விலை அறிவிக்கப்பட்டது. ஆனாலும், ரெனோ 10 மாடலின் விலை அறிவிக்கப்படவில்லை. அந்த வகையில், ஒப்போ ரெனோ 10 மாடலின் இந்திய விலை தற்போது அறிவிக்கப்பட்டு விட்டது.

அம்சங்களை பொருத்தவரை ஒப்போ ரெனோ 10 மாடலில் 6.7 இன்ச் FHD+ 120Hz AMOLED ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 13 மற்றும் கலர் ஒஎஸ் 13, இரண்டு ஆண்டுகளுக்கு ஒஎஸ் அப்டேட்கள், மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகின்றன.

 

புகைப்படங்களை எடுக்க 32MP டெலிபோட்டோ கேமரா, 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ 10 அம்சங்கள்:

6.7 இன்ச் FHD+ 2412x1080 AMOLED ஸ்கிரீன், HDR10+ 120Hz ரிப்ரெஷ் ரேட்

ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிராசஸர்

மாலி G68 MC4 GPU

8 ஜிபி ரேம்

256 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆன்ட்ராய்டு 13 மற்றும் கலர் ஒஎஸ் 13.1

ஹைப்ரிட் டூயல் சிம்

64MP பிரைமரி கேமரா, OIS

8MP அல்ட்ரா வைடு கேமரா

32MP டெலிபோட்டோ கேமரா

32MP செல்ஃபி கேமரா

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

5ஜி, வைபை, ப்ளூடூத் 5.3

யுஎஸ்பி டைப் சி

5000 எம்ஏஹெச் பேட்டரி

67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

ஒப்போ ரெனோ 10 ஸ்மார்ட்போன் சில்வரி கிரே மற்றும் ஐஸ் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 32 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News