தொழில்நுட்பம்

3ஜிபி ரேம் கொண்ட லாவா Z10 ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2017-05-25 11:19 GMT   |   Update On 2017-05-25 11:19 GMT
லாவா நிறுவனத்தின் 3ஜிபி ரேம் கொண்ட Z10 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய லாவா Z10 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:

லாவா நிறுவனத்தின் Z10 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் கொண்ட பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 2ஜிபி ரேம் கொண்ட பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக லாவா நிறுவனத்தின் A77 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. 

நாடு முழுக்க இயங்கி வரும் லாவா விற்பனை மையங்களில் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் 365 நாட்கள் வாரண்டி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 30 நாட்கள் ரீபிளேஸ்மென்ட் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. 



மேம்படுத்தப்பட்ட லாவா Z10 சிறப்பம்சங்கள்:

* 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
* ஆக்டா கோர் பிராசஸர்
* ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம்
* 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா
* 2620 எம்.ஏ.எச். பேட்டரி
* டூயல் சிம் ஸ்லாட்

மார்ச் மாதம் நடைபெற்ற விழாவில் லாவா நிறுவனத்தின் Z10 மற்றும் Z25 ஆகிய ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டன. 3ஜிபி ரேம் கொண்ட லாவா Z10 ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லாவா Z10 மற்றும் Z25 ஸ்மார்ட்போன் மாடல்களில் பல்வேறு இந்திய மொழிகளில் இயக்கும் வசதியும் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News