புதுச்சேரி

முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைபள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து மாணவிகளுக்கு பரிசுகோப்பை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கிய காட்சி.

விளையாட்டு தின தொடக்க விழா-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்

Published On 2023-01-08 06:38 GMT   |   Update On 2023-01-08 06:38 GMT
  • புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு தின தொடக்க விழா நடைபெற்றது.
  • மேலும் விளையாட்டு களின் அவசியத்தை எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார். புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

புதுச்சேரி:

புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு தின தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

மேலும் விளையாட்டு களின் அவசியத்தை எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார். புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், கவுண்டன் பாளையம் ஊர் தலைவர் ஜெகதீஸ்வரன், என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் கோபி, பள்ளியின் மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா, பள்ளியின் ஆலோசகர் ரத்தின பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்களின் அணி நடை , யோகாசனம், நடனம், பிரமிடு , போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பந்து சேகரிப்பு போட்டி, பெற்றோர்களுக்கு லக்கி சர்கிள் போன்ற போட்டிகள் நடைபெற்றன. இது அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்திருந்தது.

விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின்,ப ள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கார்த்திக் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர். 

Tags:    

Similar News