உலகம்

நிலநடுக்கம்

நியூ கலிடோனியாவில் திடீர் நிலநடுக்கம் - 6.1 ரிக்டர் அளவில் பதிவு

Published On 2022-08-15 00:29 GMT   |   Update On 2022-08-15 00:29 GMT
  • நியூ கலிடோனியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
  • இது 6.1 ரிக்டர் அளவில் பதிவானது.

நவுமியா:

நியூ கலிடோனியாவில் உள்ள நவுமியாவில் இன்று திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நவுமியா நகருக்கு கிழக்கே 477 கி.மீ. தொலைவில் 170 கி.மீ. ஆழத்தில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Tags:    

Similar News