உலகம்
ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு தாக்குதல்- ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு

Published On 2022-04-29 05:11 GMT   |   Update On 2022-04-29 05:11 GMT
ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹிட் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் சமீபத்தில் இரண்டு இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. பார்க் மாகாண தலைநகர் மசார்-இ-ஷரிபில் இரண்டு வாகனங்களை குறிவைத்து அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில், 9 பேர் கொல்லப்பட்டனர். 13 பேர் காயமடைந்தனர்.

ரம்ஜான் நோன்பு மாதத்தின்போது சிறுபான்மை சமூகங்களை குறிவைத்து கடந்த இரண்டு வாரங்களாக ஆப்கானிஸ்தான் முழுவதும் பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்படுகிறது. இருப்பினும் இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காமல் இருந்தது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹிட் கூறுகையில், " ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று கூறினார்.

இதையும் படியுங்கள்.. குஜராத்தில் உலகளாவிய படிதார் வணிக உச்சி மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
Tags:    

Similar News