உலகம்
ரஷியா எரிபொருள் நிறுவனம்

போலந்து, பல்கேரியாவுக்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்திய ரஷியா

Published On 2022-04-27 08:44 GMT   |   Update On 2022-04-27 09:50 GMT
போலந்து 53 சதவீத எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்தே இதுவரை இறக்குமதி செய்து வந்தது. பல்கேரியா 90 சதவீத எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்தே பெற்று வந்தது.
மாஸ்கோ:

ரஷியா உக்ரைன் போர் 63-அது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷியா பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடை விதித்தன.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷியா, நட்பற்ற நாடுகள் தங்களிடம் இருந்து பெறப்படும் எரிவாயுவிற்கான கட்டணத்தை அமெரிக்க டாலருக்கு பதிலாக ரூபிளில் மட்டுமே செலுத்த வேண்டும் என தெரிவித்தது. ஐரோப்பாவில் பெரும்பாலான நாடுகள் ரஷியாவிடம் இருந்தே எரிவாயு இறக்குமதி செய்வதால் இந்த அறிவிப்பு அந்நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

இந்நிலையில் பல்கேரியா மற்றும் போலந்து ஆகிய நாடுகள் அவ்வாறு ரூபிளில் பணத்தை வழங்குவதற்கு மற்றுப்பு தெரிவித்தன. இதையடுத்து அந்த இரு நாடுகளுக்கும் எரிபொருள் விநியோகத்தை வழங்குவதை ரஷியா நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இரு நாடுகளையும் பொறுத்தவரையில், போலந்து 53 சதவீத எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்தே இதுவரை இறக்குமதி செய்து வந்தது. பல்கேரியா 90 சதவீத எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்தே பெற்று வந்தது.

இந்நிலையில் ரஷியாவின் இந்த அறிவிப்பு இரு நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Tags:    

Similar News