உலகம்
இலங்கையில் போராடி வரும் மக்கள்

இலங்கை அதிபருக்கு எதிரான போராட்டம்: கடைகள் மூடல், போக்குவரத்து நிறுத்தம்

Published On 2022-04-21 12:27 GMT   |   Update On 2022-04-21 12:27 GMT
பல இடங்களில் பெண்கள் ஒப்பாரி வைத்து அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
கொழும்பு:

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் அரசுக்கு எதிரான தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசும் பதவி விலக கோரி தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

சாலைகளில் டயர்களை தீயிட்டு எரித்தும், ரயில்வே தண்டவாளத்தில் மரக்கட்டைகளை போட்டு தடை ஏற்படுத்தியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் பெண்கள் ஒப்பாரி வைத்து அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். 

ராஜபக்சேவின் உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது. போராட்டத்திற்கு ஆதரவாக கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு இடங்களில் போக்குவரத்துகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.
Tags:    

Similar News