உலகம்
மருத்துவர் ஆஷிஷ் ஜா

அமெரிக்க வெள்ளை மாளிகை கொரோனா தடுப்புக்குழு ஒருங்கிணைப்பாளராக இந்திய வம்சாவளி மருத்துவர் நியமனம்

Published On 2022-03-17 15:46 GMT   |   Update On 2022-03-17 15:46 GMT
கொரோனா தடுப்பில் தற்போதைய அபாயங்களை தடுக்கும் திறன் கொண்ட மிகச்சரியான நபர் ஆஷிஷ் ஜா என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
இந்திய- அமெரிக்க மருத்துவர் ஆஷிஷ் ஜாவை அமெரிக்க வெள்ளை மாளிகை கொரோனா தடுப்புக்குழு ஒருங்கிணைப்பாளராக நியமித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளியான மருத்துவர் ஆஷிஷ் ஜா (51) பீகாரில் பிறந்தவர். முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாக ஆலோசகராக இருந்தவர். முன்னாள் உயர் பொருளாதார ஆலோசகருமான ஜெஃப் ஜியண்ட்ஸூக்குப் பதிலாக ஆஷிஷ் ஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடுகையில், " மருத்துவர் ஆஷிஷ் ஜாவை புதிய வெள்ளை மாளிகை கொரோனா தடுப்புக்குழு ஒருங்கிணைப்பாளராக நியமிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

மருத்துவர் ஜா அமெரிக்காவின் முன்னணி பொது சுகாதார நிபுணர்களில் ஒருவர். அவரது புத்திசாலித்தனமான மற்றும் அமைதியான போக்கு பல அமெரிக்கர்களுக்கு நன்கு அறியப்பட்ட நபராக இருக்கிறார்." என்று கூறப்பட்டிருந்தது.

மேலும், ஜெஃப் கடந்த 14 மாதங்களாக கொரோனாவை எதிர்த்துப் போராட அயராது உழைத்தார். அவர் ஒரு சேவையாளர். அவரது ஆலோசனையை நான் தவறவிடுகிறேன். அவருடைய சேவைக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
கொரோனா தடுப்பில் தற்போதைய அபாயங்களை தடுக்கும் திறன் கொண்ட மிகச்சரியான நபர் ஆஷிஷ் ஜா என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் ஆஷிஷ் ஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஆமாம் அவர்கள் சொல்வது போல் சில செய்திகள் உள்ளன.. கொரோனா தொற்றுநோயில் நாம் செய்த அனைத்து முன்னேற்றங்களுக்கும்.. அமெரிக்கர்களின் வாழ்க்கை மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்க நாங்கள் இன்னும் முக்கியமான வேலைகளைச் செய்ய வேண்டும். எனவே என்னை சேவை செய்யக் கேட்டபோது, அதற்கான வாய்ப்பைப் பெற்றதற்கு நான் பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. புதினை போர் குற்றவாளி என விமர்சித்த ஜோ பைடன்: அமெரிக்காவுக்கு ரஷியா கடும் கண்டனம்
Tags:    

Similar News