உலகம்
ராணி இரண்டாம் எலிசபெத்

இங்கிலாந்தின் விண்ட்சர் கோட்டைக்குள் ஆயுதத்துடன் ஊடுருவ முயன்றவர் கைது

Published On 2021-12-26 23:03 GMT   |   Update On 2021-12-26 23:03 GMT
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 4-வது இடத்தில் நீடித்து வருகிறது.
லண்டன்:

இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புத்தாண்டு விடுமுறை கொண்டாட்டம் காரணமாக கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பங்கேற்கவில்லை. விண்ட்சர் கோட்டையில் மகனும், இளவரசருமான சார்லஸ் மற்றும் மருமகள் கமீலாவுடன் அவர் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினார்.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் தினத்தன்று விண்ட்சர் கோட்டைக்குள் மர்ம நபர் ஒருவர் ஆயுதத்துடன் அத்துமீறி நுழைய முயற்சித்தார். அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை மடக்கி கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News