உலகம்
துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு - 3 பேர் பரிதாப பலி

Published On 2021-11-30 22:21 GMT   |   Update On 2021-11-30 22:21 GMT
அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகின்றன.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. போலீசாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இதனால் துப்பாக்கி விநியோகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
இதையடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துப்பாக்கிச்சூடு சம்பவங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ஆனாலும், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்கின்றன.
 
இந்நிலையில், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News