செய்திகள்
கோப்புப்படம்

பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே மீண்டும் பேருந்து சேவை

Published On 2021-11-15 12:22 GMT   |   Update On 2021-11-15 12:22 GMT
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பேருந்து சேவை கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் தடைசெய்யப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதும் தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். தலிபான் அரசுக்கு பாகிஸ்தான் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் இடைக்கால வெளியுறவுத்துறை மந்திரி உள்ளிட்ட அதிகாரிகள் பாகிஸ்தான் சென்றிருந்தனர். அப்போது இருநாடுகளுக்கும் இடையில் நட்பு ரீதியிலான பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் கோரிக்கையை வரவேற்ற பாகிஸ்தான், அடுத்த ஆண்டில் இருந்து பேருந்து சேவை தொடங்கப்படும் என உறுதி அளித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பஸ் போக்குவரத்து கடந்த 2016-ம் ஆண்டு தடைப்பட்டது. அடுத்த ஆண்டு பாகிஸ்தானின் பெஷாவரில் இருந்து ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்திற்கு பஸ் போக்குவரத்து தொடங்கும்.

பலூசிஸ்தான் மாகாணத்தில் இருந்து பேருந்து சேவை தொடங்க வேண்டும் என தங்களது விருப்பத்தை ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் பாகிஸ்தானிடம் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News