செய்திகள்
விமானம் விழுந்த பகுதி

குடியிருப்பு பகுதியில் விழுந்த அமெரிக்க ராணுவ விமானம்- 2 பைலட்டுகள் காயம்

Published On 2021-09-20 05:04 GMT   |   Update On 2021-09-20 05:04 GMT
விமானம் தீப்பிடித்ததால் அதிர்ச்சியடைந்த விமானிகள் உடனடியாக விமானத்தில் இருந்து வெளியேறி, பாராசூட் மூலம் குதித்து உள்ளனர்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், லேக் ஒர்த் நகரில் ராணுவ விமானம் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது.  அதில், 2 விமானிகள் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த விமானிகள் உடனடியாக விமானத்தில் இருந்து வெளியேறி, பாராசூட் மூலம் குதித்து உள்ளனர்.  அவர்கள் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டு உள்ளது.

இந்த விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்ததால் 3 வீடுகள் சேதமடைந்தன. வீடுகளில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. 

விமானிகளில் ஒருவர் தரையில் கிடந்து உள்ளார்.  மற்றொருவரின் பாராசூட் மின்வயரில்  சிக்கியதால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது.  ஒயர்களுக்கு இடையே சிக்கி இருந்துள்ளார்.  காயமடைந்த விமானிகள் இரண்டு பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.
Tags:    

Similar News