செய்திகள்
அதிபர் அஷ்ரப் கனி

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியோடிய அதிபர் எங்கே இருக்கிறார்?

Published On 2021-08-18 01:54 GMT   |   Update On 2021-08-18 02:03 GMT
கஜகஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே அதிபர் அஷ்ரப் கனி தங்கள் நாட்டுக்கு வரவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.
காபூல் :

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் பயங்கரவாதிகள் நுழைந்ததும் அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் மூட்டை மூட்டையாக பணத்தை எடுத்துக்கொண்டு ஹெலிகாப்டரில் தஜிகிஸ்தானுக்கு தப்பி சென்றதாக தகவல்கள் வெளியாகின. அதே சமயம் அவர் கஜகஸ்தான் நாட்டுக்கு சென்றதாக மற்றொரு தரப்பு தகவல்கள் தெரிவித்தன.‌

ஆனால் கஜகஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே அஷ்ரப் கனி தங்கள் நாட்டுக்கு வரவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.

இதற்கிடையில் அதிபர்
அஷ்ரப் கனி
மற்றும் ஆப்கானிஸ்தானின் பிற தலைவர்கள் உஸ்பெகிஸ்தான் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டன.

இந்த நிலையில் உஸ்பெகிஸ்தான் நாடும் அஷ்ரப் கனி தங்கள் நாட்டில் இல்லை என தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் அஷ்ரப் கனி தற்போது ஓமன் நாட்டில் இருப்பதாகவும் அவர் அமெரிக்காவில் குடியேற முடிவு செய்திருப்பதாகவும் ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News