செய்திகள்
விபத்து

பயணிகள் பேருந்து -லாரி மோதல்: 30 பேர் உயிரிழப்பு

Published On 2021-07-19 16:38 GMT   |   Update On 2021-07-19 16:38 GMT
பாகிஸ்தானில் கிராமப்புறங்களில் மோசமான சாலைகள் மற்றும் போக்குவரத்து விதிமீறல் உள்ளிட்ட காரணங்களால் அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் தேரா காசி கான் மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், பேருந்து கடுமையாக சிதைந்தது.

பேருந்தில் பயணம் செய்த 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 74 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட தகவல் தொடர்பு துறை மந்திரி, ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கிராமப்புறங்களில் உள்ள மோசமான சாலைகள் மற்றும் போக்குவரத்து விதிமீறல் உள்ளிட்ட காரணங்களால் அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன. கடந்த மாதம் சிந்து மாகாணத்தில் ரெயில் விபத்தில் 56 பேர் உயிரிழந்தனர்.
Tags:    

Similar News