செய்திகள்
கொரோனா வைரஸ்

இந்தோனேசியாவில் அதிகரிக்கும் கொரோனா - 28 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு

Published On 2021-07-16 22:23 GMT   |   Update On 2021-07-16 22:23 GMT
இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மேலும் தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியாவை முந்தியுள்ளது.
ஜகார்த்தா:

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
 
அந்த வகையில் இந்தோனேசியாவில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 54,000 பேருக்கு புதிதாக  கொரோனா வைரஸ்  தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் அங்கு கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27.80 லட்சத்தைக் கடந்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1,205 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு 71 ஆயிரத்தை தாண்டியது.

தினசரி கொரோனா பாதிப்பில் இந்தோனேசியா இந்தியாவை முந்தி உள்ளது. இந்தியாவில் நேற்று 39 ஆயிரத்துக்கும் குறைவாகவே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதன்மூலம் இந்தோனேசியா ஆசியாவின் கொரோனா பரவல் மையமாக (ஹாட்ஸ்பாட்) மாறியுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இந்தோனேசியா அடுத்த இந்தியாவாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags:    

Similar News