செய்திகள்
இம்ரான்கான்

நடிகர் திலீப் குமார் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இரங்கல்

Published On 2021-07-07 18:52 GMT   |   Update On 2021-07-07 18:52 GMT
எனது தலைமுறையில் திலீப்குமார் மிகச் சிறந்த மற்றும் பன்முக நடிகராக இருந்தார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத்:

பழம் பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். திலீப் குமார் பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் பிறந்தவர் ஆவார். இதனால் அவர் பாகிஸ்தானிலும் மிகவும் பிரபலமானவராக இருந்து வந்தார்.

அதுமட்டுமின்றி இந்திய- பாகிஸ்தான் மக்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் உறவுப்பாலமாக அவர் திகழ்ந்தார்.

இந்த நிலையில் திலீப் குமார் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் ,“ திலீப்குமார் காலமானதை அறிந்து வருந்துகிறேன். எனது தலைமுறையில் திலீப்குமார் மிகச் சிறந்த மற்றும் பன்முக நடிகராக இருந்தார். அதுமட்டுமின்றி பாகிஸ்தானில் புற்றுநோய் மருத்துவமனைகளை அமைப்பதற்கு நிதி திரட்ட தனது நேரத்தை வழங்குவதில் அவரின் தாராள மனப்பான்மையை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. பாகிஸ்தான் மற்றும் லண்டனில் அவரின் தோற்றம் மிகப் பெரும் தொகையை திரட்ட உதவியது” என தெரிவித்துள்ளார்.

பெஷாவர் நகரில் உள்ள திலீப்குமாருக்கு சொந்தமான வீட்டை தேசிய பாரம்பரிய சொத்தாக பாகிஸ்தான் அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News