செய்திகள்
ஆன்டனியோ குட்டரெஸ்

ஐ.நா. பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்

Published On 2021-06-18 19:07 GMT   |   Update On 2021-06-19 08:24 GMT
போர்ச்சுகல் முன்னாள் பிரதமரான ஆன்டனியோ குட்டரெஸ் ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
நியூயார்க்:

ஐக்கிய நாடுகள் சபையின் 9-வது பொதுச்செயலாளராக போர்ச்சுக்கல் முன்னாள் பிரதமரான ஆன்டனியோ-குட்டரெஸ் (72) கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் பணிகள் நடந்தது.
 
சமீபத்தில் நடந்த ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆன்டனியோ குட்டரெசையே மீண்டும் பொதுச் செயலாளராக்குவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில், ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்டனியோ-குட்டரெஸ் ஐ.நா.சபை பொது செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் 2026-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி வரை தொடரும்.
Tags:    

Similar News