செய்திகள்
அதிபர் ஜோ பைடன்

உங்கள் உதடுகளில் புன்னகையை கொண்டு வரும் காலம் வரும் - ஜோ பைடன்

Published On 2021-06-16 01:41 GMT   |   Update On 2021-06-16 08:26 GMT
கொரோனா பாதிப்புக்கு 6 லட்சம் பேர் பலி என்ற கொடூர மைல் கல்லை நாம் கடந்துள்ளோம் என அமெரிக்க அதிபர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
வாஷிங்டன்:

உலக அளவில் 17.7 கோடி பேர் கொரோனா பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கின்றனர். பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகளுக்கு சர்வதேச அளவில் அதிக உயிரிழப்புகளை கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது.

அந்நாட்டில் உயிரிழப்பு 6 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று, பாதிப்பு எண்ணிக்கையிலும் (3,43,44,659) அதிக அளவில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா பாதிப்புக்கு 6 லட்சம் பேர் பலி என்ற கொடூர மைல் கல்லை நாம் கடந்துள்ளோம். அன்பிற்கு உரியவர்களை இழந்தவர்கள் அனைவருடனும் எனது மனம் இணைந்திருக்கிறது.

உங்களை உள்வாங்கிக் கொள்ளும் கருந்துளையை பற்றி எனக்கு தெரியும். ஆனால், உங்களுடைய கண்களில் இருந்து கண்ணீர் வருவதற்கு முன் உங்களுடைய உதடுகளில் புன்னகையைக் கொண்டு வரும் காலமும் வரும் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News