செய்திகள்
கொரோனா பரிசோதனை

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - இஸ்ரேலைப் பின்னுக்கு தள்ளியது பாகிஸ்தான்

Published On 2021-05-07 20:37 GMT   |   Update On 2021-05-07 20:37 GMT
பாகிஸ்தானில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8.5 லட்சத்தைத் தாண்டியது.
இஸ்லாமாபாத்:

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
 
பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 4,298 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 50 ஆயிரத்து 131 ஆக உள்ளது.

அங்கு ஒரே நாளில் 140 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 18,677 ஆக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
 
இதன்மூலம் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இஸ்ரேலைப் பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் தற்போது 29-வது இடத்தில் உள்ளது.
Tags:    

Similar News