செய்திகள்
கொரோனா வைரஸ்

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பிரான்சுக்கும் பரவியது

Published On 2021-04-30 17:02 GMT   |   Update On 2021-04-30 17:02 GMT
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சிலும் இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பரவியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாரிஸ்:

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உருவாகி உள்ளது. ‘பி.1.617’ அல்லது இரட்டை பிறழ்வு திரிபு வைரஸ் என அழைக்கப்படுகிற இந்த வைரஸ், மராட்டிய மாநிலத்தில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் வேகம் எடுப்பதற்கு இந்த வைரஸ் காரணமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த வைரஸ் பரவல் 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அண்மையில் கூறியது.



இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சிலும் இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பரவியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட பெண் ஒருவருக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News