செய்திகள்
உயிரிழப்பு

புளோரிடா நோக்கி சென்ற சிறிய விமானம் விழுந்து நொறுங்கியது- 4 பேர் பலி

Published On 2021-04-26 04:12 GMT   |   Update On 2021-04-26 04:12 GMT
அமெரிக்காவில் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 4 பேரும் உயிரிழந்தனர்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாநிலத்தில் இலகு ரக விமானம் விபத்துக்குள்ளானது. ஒற்றை எஞ்சின் கொண்ட பைபர் பிஏ-46 என்ற விமானம், வெள்ளிக்கிழமையன்று நான்கு பேருடன் ஓக்லஹோமாவின் விமான நிலையமான மஸ்கோகியில் இருந்து வடக்கு புளோரிடாவில் உள்ள வில்லிஸ்டன் நோக்கி புறப்பட்டது. 

ஆனால் அன்று மாலை 5 மணியளவில், ஆர்கன்சாஸ் மாநிலம் லிட்டில் ராக் அருகே சென்றபோது ரேடார் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி நடைபெற்றது.

லிட்டில் ராக் அருகில் வசித்த மக்கள், விமானம் ஒன்று விழுந்த சத்தம் கேட்டதாக கூறினர். அப்பகுதியில் மீட்புக்குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டபோது, விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. விமானத்தில் பயணித்த 4 பேரும் உயிரிழந்தனர். 
Tags:    

Similar News