செய்திகள்
கொரோனா பரிசோதனை

அதிரும் பிரேசில் - 3.5 லட்சத்தைக் கடந்தது கொரோனா பலி எண்ணிக்கை

Published On 2021-04-10 22:18 GMT   |   Update On 2021-04-10 22:18 GMT
பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.34 கோடியைக் கடந்துள்ளது.
ரியோ டி ஜெனிரோ:

பிரேசிலில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

அங்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 70 லட்சத்தை நெருக்கமாக உள்ளது. வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 34 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
 
அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 2500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 3 லட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1.30 கோடியைக் கடந்துள்ளது. தொற்று பாதிப்புடன்13.75 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதன்மூலம் உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது
Tags:    

Similar News