செய்திகள்
பாதுகாப்பு பணியில் வீரர்கள் (கோப்பு படம்)

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல்- 14 பேர் பலி

Published On 2021-03-13 13:08 GMT   |   Update On 2021-03-13 13:08 GMT
ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காபூல்:

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள ஹெராத் நகரில் காவல்துறை தலைமையகத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். நேற்று இரவு சக்திவாய்ந்த கார் குண்டு வெடித்து சிதறியதில், பெண்கள், குழந்தைகள் என 8 பேர் கொல்லப்பட்டனர். 47 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலை தலிபான் பயங்கரவாத அமைப்பு நிகழ்த்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், தலிபான் அமைப்பு தங்களுக்கு இதில் தொடர்பு இல்லை என தெரிவித்துள்ளது. 

இதேபோல் குந்தூஸ் மாகாணத்தில் இன்று நடந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 6 பேர் கொல்லப்பட்டதாகவும், 5 வீரர்களை தலிபான் பயங்கரவாதிகள் சிறைப்பிடித்து சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில மாதங்களாக ஆப்கானிஸ்தானில் வன்முறை தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. அரசுக்கும் தலிபான் அமைப்புக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையிலும், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், போலீசார் மற்றும் படுகொலை செய்யப்படுகின்றனர். இந்த தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News