செய்திகள்
ரஷிய விமானப்படை விமானங்கள்

சிரியாவில் ரஷிய விமானப்படை அதிரடி தாக்குதல்... 21 ஐஎஸ் பயங்கரவாதிகள் பலி

Published On 2021-02-20 11:17 GMT   |   Update On 2021-02-20 11:17 GMT
சிரியாவில் அரசுக்கு ஆதரவாக ரஷிய விமானப்படை நடத்திய தாக்குதல்களில் 21 ஐஎஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மாஸ்கோ:

சிரியாவில் அரசுப்படைகள் மற்றும் அரசு ஆதரவு படைகள் மீது ஐஎஸ் அமைப்பினர் தொடர்ந்து வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். அரசுப் படைகளுக்கு ஆதரவாக, ஐஎஸ் அமைப்பினரை அழிக்கும் நடவடிக்கையில் ரஷிய படைகள் ஈடுபட்டுள்ளன.

அவ்வகையில், கடந்த 24 மணி நேரத்தில் ரஷிய விமானப்படை மூலம் 130 முறை வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அலெப்போ, ஹமா மற்றும் ரக்கா ஆகிய மாகாணங்களின் பாலைவனப் பகுதிகளில்  நடத்தப்பட்ட தாக்குதல்களில், 21 ஐஎஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறி உள்ளது. 

அரசுப் படைகள் மீது ஐஎஸ் அமைப்பினர் வெள்ளிக்கிழமை நடத்திய தொடர் தாக்குதல்களில் 8 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷிய வான்படை தாக்குதல் நடத்தி உள்ளது.

இதுவரை நடந்த மோதல்களில் அரசுப் படைகள் தரப்பில் 1300 வீரர்கள், 750 ஐஎஸ் பயங்கரவாதிகள், 145 ஈரான் ஆதரவு போராளிக்குழுவினர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறி உள்ளது.

சிரியாவில் 2011ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் உள்நாட்டுபோரில் இதுவரை 3.87 லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். 
Tags:    

Similar News