செய்திகள்
கோப்புப்படம்

இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த தடுப்பூசிக்கு ஒப்புதல் - உலக சுகாதார நிறுவனம் வழங்கியது

Published On 2021-02-17 01:28 GMT   |   Update On 2021-02-17 01:28 GMT
இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
டொரோண்டோ:

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை தடுத்து நிறுத்த உலகளவில் பல தடுப்பூசிகள் உருவாக்கப்படுகின்றன.

அந்த வகையில், அமெரிக்காவின் பைசர் மற்றும் ஜெர்மனியின் பயோ என்டெக் மருந்து நிறுவனம் கூட்டாக தயாரித்து வழங்கும் தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியது.

இந்த நிலையில், தற்போது புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்தின் தடுப்பூசிக்கும், தென்கொரியாவின் அஸ்ட்ராஜெனேகா எஸ்கேபயோ நிறுவனம் தயாரித்து வழங்கும் தடுப்பூசிக்கும் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால் ஐ.நா. சபை ஆதரவு பெற்ற கொரோனா தடுப்பு முயற்சியில் கையெழுத்திட்ட பல நாடுகளுக்கு தடுப்பூசி கிடைப்பதற்கு வாய்ப்பு கனிந்துள்ளது.

இதுவரை தடுப்பூசி பெறாத நாடுகளுக்கு தடுப்பூசி பெறவும், அவற்றை சுகாதார பணியாளர்களுக்கும், கொரோனா ஆபத்தில் உள்ள பொதுமக்களுக்கு செலுத்தவும் வாய்ப்பு உருவாகி உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் உயர் அதிகாரி டாக்டர் மரியேஞ்சலா சிமாவ் தெரிவித்தார்.
Tags:    

Similar News