செய்திகள்
காங்கோ ராணுவ வீரர்கள் (கோப்பு படம்)

காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் - பொதுமக்கள் 46 பேர் பலி

Published On 2021-01-15 21:41 GMT   |   Update On 2021-01-15 21:41 GMT
காங்கோ நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 46 பேர் கொல்லப்பட்டனர்.
கின்ஷாசா:

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. பல்வேறு தரப்பு கிளர்ச்சியாளர்கள் பிரிவுக்கும் அரசுப்படையினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல்களின் போது கிளர்ச்சியாளர்கள் நடத்து தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் இடுரீ மாகாணத்தில் உள்ள அபிமீ என்ற கிராமத்திற்குள் நுழைந்த ஏடிஎஃப் என்ற கிளர்ச்சிப்படையினர் கிராமத்தில் இருந்த பொதுமக்கள் மீது 46 பேரை சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதலில் கிராம மக்களில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற கிளர்ச்சியாளர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News