செய்திகள்
டிரம்ப்

ஒரு வழியாக தோல்வியை ஒப்புக்கொண்டார் டிரம்ப் -அதிகார மாற்றத்துக்கும் சம்மதம்

Published On 2021-01-07 10:13 GMT   |   Update On 2021-01-07 10:13 GMT
அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை அடுத்து, டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 3-ந்தேதி நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். அவர் 306 ஓட்டுகள் பெற்றார். குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டிரம்ப் (232 ஓட்டு) தோல்வியை தழுவினார். 

ஆனால் தேர்தலில் ஜோ பைடன் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக கூறிய டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. இது தொடர்பாக டிரம்ப் தரப்பில் மாகாண கோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதன் மூலம் டிரம்பின் சட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன. ஆனாலும், டிரம்ப் தொடர்ந்து தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதம் பிடித்து வந்தார். அதேபோல் அவரது ஆதரவாளர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழ் வழங்கும் பணிகளை பாராளுமன்றம் மேற்கொண்ட போதும் டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.



இந்த பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஜோ பைடன் 306 வாக்குகள் பெற்று அதிபராக தேர்வானார். அவர் வெற்றி பெற்றதாக துணை அதிபர் மைக் பென்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து சான்றளித்தார். 

இதனையடுத்து அதிபர் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். அத்துடன், அதிகார மாற்றத்திற்கும் ஒப்புதல் அளித்தார். 

இதனால், ஜோ பைடன் அதிபராக பதவியேற்பதில் இருந்த கடைசி சிக்கலும் நீங்கியது. வரும் 20ம் தேதி அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார். அதன்பின்னர் டிரம்ப், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் வெள்ளை மாளிகையை புதிய அதிபர் ஜோ பைடனிடம் ஒப்படைப்பார். 
Tags:    

Similar News