செய்திகள்
கோப்புப்படம்

தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளி நிழல் உலக தாதா சுட்டுக்கொலை

Published On 2021-01-05 19:08 GMT   |   Update On 2021-01-05 19:08 GMT
தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளி நிழல் உலக தாதாவை மர்மநபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதிர் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
ஜோகன்னஸ்பர்க்:

தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு அருகில் உள்ள ஷால்கிராஸ் நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யகநாதன் பிள்ளை. போதைப்பொருள் கடத்தல் மன்னனான இவர் போதைப்பொருள் கடத்தல் ஆயுத விற்பனை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு நிழலுலக தாதாவாக விளங்கி வந்தார். சட்ட விரோதமாக பணம் ஈட்டிய போதிலும் தனது சமூகம் சார்ந்த மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்தார். இதனால் அவர் அந்த பகுதியில் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் யாகநாதன் பிள்ளை வீட்டில் தனது மகளுடன் இருந்தார். அப்போது 2 பேர் அவர் வீட்டின் கதவை தட்டினர். இதையடுத்து யாகநாதன் பிள்ளை வீட்டின் கதவை திறந்தார். அப்போது வாசலில் நின்று கொண்டிருந்ததால் மர்மநபர்கள் 2 பேர் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதனைத் தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் அந்த பகுதியை சேர்ந்த யாகநாதன் பிள்ளையின் சமூக மக்கள் அவர்களை விரட்டிச் சென்று மடக்கினர். பின்னர் அவர்களை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்திக்கொலை செய்தனர். அதோடு நிற்காமல் அவர்களது தலையை துண்டித்து, உடல்களை பொதுமக்கள் பார்வையில் படும்படி வீதியில் வைத்தனர்.
Tags:    

Similar News