செய்திகள்
கோப்பு படம்

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவர மெக்சிகோ அரசு அனுமதி

Published On 2021-01-05 09:42 GMT   |   Update On 2021-01-05 09:42 GMT
அஸ்ட்ரா ஜெனகா நிறுவனமும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவர மெக்சிகோ அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மெக்சிகோ சிட்டி:

உலக அளவில் கொரோனா வைரசால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் மெக்சிகோவும் ஒன்று. மெக்சிகோவில் இதுவரை 14 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ரா ஜெனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி வைரஸ் பரவலை தடுப்பது தெரியவந்துள்ளது.

இதனால், இந்த தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இங்கிலாந்து, இந்தியா, அர்ஜெண்டினா ஆகிய நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன.

இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி நேற்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தியாவில் இன்னும் சில நாட்களில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பயன்பாட்டிற்கு வர உள்ளது.

இந்நிலையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதி அளித்துள்ள நாடுகள் பட்டியலில் தற்போது மெக்சிகோவும் இணைந்துள்ளது.

ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு மெக்சிகோ அரசு நேற்று அனுமதி வழங்கியுள்ளது. அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்தை தொடர்ந்து இன்னும் சில நாட்களில் மெக்சிகோவிலும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. 
Tags:    

Similar News